×

தென்னை நார் உற்பத்தியாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்

கம்பம், மார்ச் 1: தேனி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன; ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், தொழிற்சாலைக்கான மூலப்பொருளான உரிமட்டையை எண்ணிக்கை கணக்கில் வாங்குவதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனால், உரிமட்டையை கிலோ கணக்கில் வாங்க முடிவு செய்துள்ளனர். இது குறித்த தேனி மாவட்ட தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று கம்பத்தில் நடைபெற்றது. தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். செயலாளர் மணி, பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து சங்க தலைவர் ராஜரத்தினம் கூறுகையில், ‘உரிமட்டையை எண்ணிக்கை கணக்கில் வாங்கி தொழிற்சாலையை இயக்கி வருவதால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடர்ந்தால் தொழிற்சாலை இயக்க முடியாது. தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். இதனால், உரிமட்டையை இனி எடைக் கணக்கில் வாங்க முடிவு செய்துள்ளோம். மார்ச் 1 முதல் ஒரு டன் உரிமட்டை ரூ.2 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேங்காய் கோடவுன் உரிமையாளர்களும், மட்டை வியாபாரிகளும், தென்னை விவசாயிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Coconut Fiber Manufacturer Association ,
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...